வணக்கம்.
தற்சமயம் தமிழக அரசு, தமிழ் செம்மொழி மாநாடு ஒன்றினை கோவை நகரத்தில் நடத்தி வருகிறது.
இந்த தருன்ணத்தில், தங்கள்ளுடன் நான் எனது தமிழ் புலமையை வெளிக்காட்ட விரும்புகிறேன்.
நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் இச்சம்பவம், எனது 2வது அல்லது 3வது வகுப்பில் நடந்ததாகும். எங்களது தமிழ் பாடத்தில், பெருந்தலைவர் காமராஜரை பற்றி ஒரு பகுதி இருந்தது.
ஒருமுறை, ஏதோ ஒரு பரிட்சையில் இப்பாடதிலிருந்து கேள்ளவி கேட்கப்பட்டது. வினாத்தாளில் "காமராஜர் கள்ளுக் கடை மறியலை முன்னின்று நடத்தினார்" என்று எழுத வேண்டும். ஆனால் நானோ, "காமராஜர் கள்ளுக் கடையை முன்னின்று நடத்தினார்" என்று எழுதி விட்டேன்.
இதனை படித்த எனது தமிழ் வாத்தியார், எனது பெற்றோரிடம் அதை காட்ட, அனைவரும் வெகு விமரிசையாக எள்ளி நகையாடினார்கள்.
இன்று வரை, எங்கள் வீட்டில், நான் எப்பொழுது எனது தமிழ் புலமையை வெளிக்கொணர முயல்வேனோ, அப்பொழுது எல்லாம், எனது பெற்றோர், மேலே விவரித்த சம்பவத்தை நினைவு கூர்ந்து, என்னை வெகுவாக கிண்டல் செய்வார்கள்.
வாழ்க தமிழ்.
1 comment:
சொல் பிழை இருந்தால் மன்னித்து விடலாம், ஆனால் "பரீட்சை" என்கிற அந்தணர் மொழி-சொல்லை பயன்படுத்தி உள்ளீரே. அய்யஹோ.
Post a Comment